spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2026ல் அதிமுகவுக்கு 3வது இடம்... பழனிசாமிக்கு சேதி சொன்ன விஜய்... ஆர்.மணி நேர்காணல்!

2026ல் அதிமுகவுக்கு 3வது இடம்… பழனிசாமிக்கு சேதி சொன்ன விஜய்… ஆர்.மணி நேர்காணல்!

-

- Advertisement -

தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜயின் பேச்சு என்பது, இனி அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதிபடுத்தி விட்டதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக பொதுக்குழுவில் விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக – தவெக கூட்டணி ஏற்படுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அடுத்த தேர்தல் தவெக Vs திமுக என்று கொண்டு செல்கிறார். அதிமுக, தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பரிதவிப்புடன் இருந்தது. அதைவிட அப்படி இருப்பதை திரும்ப திரும்ப வெளியில் காட்டிக் கொண்டார். சட்டமன்றத்தில் விஜயை, அப்படி ஆதரித்து பேச தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி இன்னும் பக்குவப்பட வேண்டும். விஜய் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அவசரப்பட்டுவிட்டார் என்பது உண்மை. ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா?

கரூர் கூட்ட நெரிசல் பற்றிய கேள்வி.... நடிகர் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?

தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேசியது என்பது திமுக என்பதை தாண்டி அதிமுகவுக்குமான செய்தியுமாகும். கரூர் சம்பவத்திற்கு திமுகவிடம் இருந்து வரும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ள விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்வார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அதிமுகவினர் ஆபத்பாண்டவனாக வந்து விஜய் காப்பாற்றிவிட மாட்டாரா என்கிற ஏக்கம் இருந்தது. அவர்கள் ஒவ்வொரு முறையும் விஜயை ஆதரித்து பேசுகிறபோது, அவருக்கு தங்களை காப்பாற்றுங்கள் என்று அபாய எச்சரிக்கையை விடுத்தார்கள். தற்போது கிட்டத்தட்ட கூட்டணி இல்லை என்றாகி விட்டது. ஏன் தன்னுடைய பலத்தை அதிமுக குறைத்து மதிப்பிடுகிறது. அதிமுக 20 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் நிலையில், தேர்தல் நெருங்குகிறபோது அதிமுக Vs திமுக என்றுதான் வந்து நிற்கும். ஜெயலலிதாவுக்கு ஒரு கட்டத்தில் விஜயகாந்த் தேவைப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவர் கூட்டணி விவகாரத்தை இப்படி கையாளவில்லை.

திமுக, தவெக இடையே தான் போட்டி என்று விஜய் முன்னிறுத்துகிறபோது, திமுக – அதிமுக இடையே தான் போட்டி என்பதை உறுதிபடுத்த வேண்டிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிகிறபோது, அது அதிமுகவுக்கு சவாலாக அமையும். தேர்தல் நெருக்கத்தில் திமுக Vs அதிமுக என்று வந்தால், 4 முனை போட்டி திமுகவுக்கு தான் சாதகமாக அமையும். திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்போது 2வது மற்றும் 3வது இடத்திற்கு தான் போட்டி இருக்கும். தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் தென் மாவட்டங்களில் 20 தொகுதிகள் வரை அதிமுகவை பலவீனப்படுத்துவார்கள். 5 முனை போட்டி என்று வருகிறபோது, திமுக மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும்.  கரூர் துயர சம்பவத்திற்கு பிறகும் தனித்து போட்டியிடுவதில் விஜய் உறுதியாக நிற்பதன் காரணம், அவருக்கு தன்னை குறித்து இருக்கும் மிகை மதிப்பீடாக இருக்கலாம். தனியாக நின்று வெற்றி பெற்றுவிடலாமோ என்று அவர் நினைக்கிறார். கூட்டணி இல்லாமல் கலைஞர், ஜெயலலிதாவே வெற்றி பெற்றது இல்லை. வாக்கு அரசியலில் கூட்டணி இல்லாமல் நிற்பது என்பது சீமானை போன்றுதான் தேர்தலில் நின்று தோற்பார்கள்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்து 7 மாதங்கள் ஆகியும் ஜெல் ஆகவில்லை. கூட்டணிக்கு ஒரு புதிய கட்சியும் வரவில்லை. மாறாக என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் கூட்டணியை விட்டு போய்விட்டார்கள். கூட்டணி வரும் என்று எதிர்பார்த்த பாமகவில், இன்று அப்பா – மகன் இடைய அடிதடி சண்டைகள் நடக்கிறது. அப்போது என்டிஏ என்பதே இல்லையே. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா கூட்டணிக்கு முயற்சிக்கிறார். ஆனால் அது எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. பீகார் தேர்தலுக்கு பின்னர் அமித்ஷா கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பும். ஆனால் அவர்களால் இங்கே என்ன செய்ய முடியும். அவர்களுக்கு தமிழ்நாட்டில் நண்பர்களே இல்லை. பாமக உடைந்துகிடக்கிறது. தேமுதிக கிட்டத்தட்ட திமுக பக்கம் போய்விட்டார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் மிகச் சிறியை. அவருக்கு வாக்கு வங்கியே கிடையாது. அதிமுக  – பாஜக, தவெக, சீமான் என்று போனால் திமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும்.

விஜய், அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று சொல்ல காரணம் அங்கே சென்றால் தனக்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கலாம். ஆதவ் அர்ஜுனா விஜயின் ஆதரவோடுதான் அதிமுகவை விமர்சித்து பேசியுள்ளார். அவருடைய பேச்சு என்பது அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும், அவர்களுடன் கூட்டணி இல்லை என்பது தான். அதிமுக, இனி பாஜக கூட்டணியில் இருந்து வருவதற்கு சாத்தியமே கிடையாது. அந்த கட்டத்தை அவர்கள் கடந்து சென்றுவிட்டனர். அப்படி அதிமுக வெளியே வந்தால் இருக்கும் வாக்குகளும் சிதறிவிடும். எனவே இந்த விவகாரத்தில் இழப்பு அதிமுகவுககு தான். தவெக பொதுக்குழுவில் விஜயின் பேச்சு என்பது,  அதிமுகவுக்கு ஒரு கெட்ட செய்தியாகும். எடப்பாடி பழனிசாமி இனி சுதாரித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவின் பிரதான எதிரி திமுக தான். திமுக எதிர்ப்பை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்துகிறபோது அதிமுகவுக்கு வாய்ப்பு அதிகரிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ