Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து... 3 பெண்கள் பலி!

ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து… 3 பெண்கள் பலி!

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் மூன்று பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

we-r-hiring

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக மார்கழி மற்றும் தை மாதங்களில் வருடம் தோறும் சென்று வருகின்றனர். அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டு, திருச்செந்தூரில் இருந்து இருக்கன்குடி நோக்கி யாத்திரையாக தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நேற்று மாலை ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை அருகில் உள்ள பாலம் அருகே பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் பக்தர்கள் கூட்டத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள்( 55), கரம்விளையைச் சேர்ந்த கஸ்தூரி (55) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டப்பிடாரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை மணியாச்சி சரக டிஎஸ்பி அருள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தஞ்சாவூரைச் சேர்ந்த ராம் பிரசாத் (32) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ