spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை ஆதீன தொடர்பான வழக்கு - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை ஆதீன தொடர்பான வழக்கு – அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

-

- Advertisement -

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான , பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள
1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதமானது ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது இவ்வாறு உள்ள நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

we-r-hiring

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருன் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார் அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தற்போது இது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள்
வெளியேற மறுக்கின்றனர் அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

MUST READ