Homeசெய்திகள்சினிமா'வானத்தைப் போல' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘வானத்தைப் போல’ சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

‘வானத்தைப் போல’ சீரியலில் இருந்து நடிகை தேப்ஜானி மோடக் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை தேப்ஜானி பெங்காலி சீரியலில் நடித்து வந்தார். அதையடுத்து ராசாத்தி சீரியல் மூலம் தமிழ் சீரியல் உலகிற்குள் நுழைந்தார். தமிழில் வானத்தைப் போல சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் அவர் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். “என்னை நன்றாக நடத்திய அன்பான குழுவிற்கு நன்றி. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரை நான் இங்கு சந்தித்தேன். ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், ஸ்வேதா கெல்கே மற்றும் சாந்தினி பிரகாஷ் ஆகியோராவ் நான் நிச்சயமாக மிஸ் செய்வேன். ஆனால் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். உங்கள் நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேப்ஜானி திடீரென சீரியலில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளதால் அந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ