சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை அஞ்சலி ஆனந்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் அஞ்சலி ஆனந்த் (33), திரையுலகில் நிலவும் நிறம் மற்றும் உடல் வடிவம் சார்ந்த பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவா் உடல் பருமன் கொண்ட முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பெரும் பாராட்டுகளை பெற்று, ரசிகா்களை தம் பக்கம் சோ்த்துள்ளாா். இதனிடையே அஞ்சலி ஆனந்த், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் ஒரு நபர், தன்னை ‘குண்டு’ என்று பதிவிட்டு கேலி செய்துள்ளாா் என்று கூறிய அஞ்சலி இதற்கு சற்றும் தயங்காமல் பதிலடி கொடுத்துள்ளாா். ‘எனக்குத் தெரியும் நான் குண்டு என்று, அதேபோல் உங்களுக்கும் தெரியும் நீங்கள் வழுக்கை என்று. குண்டாக இருப்பவரை குண்டு என்றும், வழுக்கையாக இருப்பவரை வழுக்கை என்றும் தான் சொல்வார்கள். இது உங்களுக்கு புரிகிறதா? அல்லது இன்னும் விளக்கம் வேண்டுமா? என்று கூறியுள்ளாா். மேலும் அந்த உரையாடலின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘என்னை யாரும் அசைக்க முடியாது, தள்ளியே இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அஞ்சலி ஆனந்த், மனிஷ் மல்ஹோத்ரா தயாரிப்பில் ஷபானா ஆஸ்மி மற்றும் ஜீனத் அமன் ஆகியோருடன் இணைந்து ‘பன் டிக்கி’ என்ற படத்திலும், வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகும் ‘தமால் 4’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
