spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபணம் கொடுத்து பேச வைத்த விஜயின் ரகசிய மேனேஜர்! வழக்கு தொடுக்கும் திரிஷா! இந்திரகுமார், மில்டன்...

பணம் கொடுத்து பேச வைத்த விஜயின் ரகசிய மேனேஜர்! வழக்கு தொடுக்கும் திரிஷா! இந்திரகுமார், மில்டன் நேர்காணல்!

-

- Advertisement -

தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தவர்களுக்கும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீதும் நடிகை திரிஷா காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, மில்டன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

we-r-hiring

நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் அவதூறு கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, மில்டன் ஆகியோர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- செய்தியாளர் சந்திப்பில் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு அரசியல் தலைவராக அரசியல் ரீதியாக நயினார் பதில் அளித்திருக்க வேண்டும். அவரை வீட்டை விட்டு வெளியே வா என்பது சரி. ஆனால் திரிஷா வீட்டில் இருந்து வெளியே வா என்பது எவ்வளவு மோசமான, அருவருப்பான எண்ணத்தில் இருந்து இது வருகிறது. இது பாஜகவினருக்கே உரித்தான மனோபாவமாகும். இது ஏன் நயினாருக்கு வருகிறது?

உங்கள் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி குறித்து பேசியதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை வரவேற்கவோ, கருத்துசொல்லவோ பாஜக கும்பலுக்கோ, வழக்கை தொடர்ந்த நடிகை குஷ்புவுக்கோ தகுதி உள்ளதா? திரைத்துறையை சேர்ந்த சக நடிகை குறித்து நயினார் தெரிவித்த கருத்து குறித்து முதலில் அவர் வாய் திறக்கட்டும். திமுக அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசியது சமூக வலை தளங்களில் வெளியானபோது, அக்கட்சியை சேர்ந்த கனிமொழியே கண்டித்தார். அவர்கள் கண்டிக்கும்போது, பாஜகவினர் ஏன் நயினாரை கண்டிக்கக் கூடாது?

நயினார் நாகேந்திரன்

நடிகை விவகாரத்திலும் நயினாரை கண்டிப்பது திமுக மற்றும் திராவிட இயக்கத்தினர் தான். தமிழச்சி தங்கபாண்டியன் கண்டித்து அறிக்கையே வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் குளிர் காய்கின்றனர். ஆனால் அண்மையில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரரை ஒரு பெண்ணுடன் தொடர்பு படுத்தி பேசியவர் தான் அண்ணாமலை. அவருடைய கட்சி தலைவர்களாக இருக்கும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் ஒரு இளம் பெண்ணை வேவு பார்த்ததை கண்டறிந்ததற்காக ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்தனர். பாலியல் பாபாக்கள் பலரை காப்பாற்றிவிட்டது இந்த பாஜக அரசு.

திராவிட இயக்க மேடைகளில் ஆபாசமாக பேசியதில்லையா? என்று எதிர் கேள்வி கேட்கலாம். ஆனால் ஜெயலலிதா காலத்தில் கைது செய்யப்படாத சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது மு.க.ஸ்டாலின் அரசு. சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியது ஆபாசமாக இருக்கிறது என்றால், ஆபாசமாக பேசாத உங்கள் கட்சியினரின் பட்டியலை எடுத்துப்போடுங்கள். இவ்வளவு காலமாக நடந்த வழக்கில் திடீரென சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைக்க காரணம் அவரை களத்தில் எதிர்கொள்ள முடியாததுதான். பிணை வழங்கினாலும் அவர் பேசக் கூடாது என்று நிபந்தனை விதிப்பார்கள்.

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு - விஜய் ஆவேசம்

நடிகை குறித்து நயினார் தெரிவித்த கருத்துக்களுக்கு சூத்திரதாரிகள் சிலர் உள்ளனர். அவர்கள் குறித்தும் பேச வேண்டி உள்ளது. பிஎஸ்மி, அந்தணன் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பேசுகிறபோது அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அந்த நடிகை குடும்பத்தில் பிரச்சினையில் உள்ளார் என்று நடிகை திரிஷாவின் பெயரை சொன்னது அவர்கள்தான். பிஸ்மி, த்ரிஷா போட்ட ட்விட்டை எடுத்து, விஜயை டேக் செய்து வெளியிட்டார். திரைத்துறையில் உள்ளவர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் இவர்கள் இன்றைக்கு விஜய்க்கு ஒத்து ஊதக்கூடிய ரூட் கிட்ட பேமெண்ட் வாங்குகிறார்கள் என்பது குற்றச்சாட்டு.

நயினார் பேசியசின் சாரத்தைவிட என்ன குறைவாக இவர்கள் மூவரும் பேசிவிட்டனர் என்று தவெகவினர் சொல்ல வேண்டும். தவெகவில் இருக்கும் முக்கிய நபர் விஜய்க்காக அவர்களுக்கு பண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய அண்ணனை குறித்தும், நடிகை குறித்தும் தவறாக பேசியவர்களுக்கு மோதிரம், செயின் வழங்கலாமா? என்று யோசிக்கக்கூடதா? இவர்கள் இப்படி பேசாவிட்டால் சினிமாவை தாண்டி இருக்கும் அரசியல் வட்டாரம் இதை பேச தயங்குமா? இல்லையா?

ஜேசன் சஞ்சய், சங்கீதா குறித்து பேசியவர்களும், அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் வெளியே சொன்னதும் அவர்கள்தான். ஜேசன் சஞ்சய்க்கு பட வாய்ப்பு வாங்கித்தந்தது விஜய் அல்ல என்பதையும் சொன்னவர்கள் இவர்கள் தான். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இது சினிமா செய்தியா? அருவருக்கத்தக்க வகையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய இந்த நபர்கள் போன்றவர்கள்தான், அரசியலில் நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அவதூறாக பேசுவதற்கு காரணமாகும். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட விளக்க வீடியோவில், எதற்காக அப்படி பேசினோம் என்று சொல்லாமல், அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? என்று கேட்கிறார்கள்.

அதை சம்பந்தட்ட நடிகரும், நடிகையும் ஒப்புக்கொண்டார்களா? அதுகுறித்து பேசுவதற்கு நீங்கள் யார்? இதற்கு பெயர் இதழியலா? சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து மன்சூர்அலி கான் பேசியது சர்ச்சையாகியது. தொடர்ச்சியாக திரிஷா குறித்து அவதூறு பரப்பப்படுவது வருத்தத்தை அளிக்கிறது.எனவே நடிகை த்ரிஷா இப்படி அவதூறு பரப்புபவர்களையும், அவர்களுக்கு மாதம் மாதம் பேமெண்ட் வழங்கும் விஜய் நிறுவனத்தினர் மீதும் வழக்கு தொடர வேண்டும்.

MUST READ