சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை என்றும் தன்னை இப்படியே விட்டு விடுங்கள் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அத்துடன் மனிதர்களிடம் இருக்கும் ஜெனியூனிட்டியை திரைத்துறையில் இருக்கும் ஈகோ சிஸ்டம் குறைத்து விடும் என்றும் பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. ராதிகா சரத்குமார் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக சரத்குமார், சூரி மற்றும் படக்குழுவினர் ராதிகா சரத்குமார், இளவரசு, பால சரவணன், உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் எஸ்.கே.ப்ரொடக்சன் நிறுவனத்தை தன்னுடைய நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்குனராக வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார். அந்த நிறுவனத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

தாய் கிழவி படத்தின் கதையை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்தான் கொண்டு வந்தார். அந்த கதையை கேட்டு முடித்தவுடன் இயக்குனர் சிவகுமார் முருகேசன் உடன் இரண்டு படங்களில் பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அதில் இரண்டாவது படத்தில், தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றும் முன்பே முடிவு செய்து விட்டேன். ஆனால் இயக்குனர் சிவக்குமார் முருகேசனிடம் பிறகு தான் தெரிவித்தோம் என்று கூறினார். அதற்கு அவர் கதை சொன்ன விதமும் கதையும் மட்டும் காரணம் இல்லை அவருடைய ஜெனியூனிட்டிதான் காரணம் என்று தெரிவித்தார். அது மட்டுமில்லாமல், அவரிடம் நிறைய ஜெனியூனிட்டி இருக்கிறது. அதை இந்த துறையில் இருக்கும் ஈகோ சிஸ்டம் குறைத்து விடும். அது குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தன்னுடைய கடமை எனவும் சிவகார்த்திகேயன் உறுதியளித்தார்.
இந்தத் திரைப்படத்தில் தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகாவை தவிர இந்தியாவில் வேறு எந்த நடிகராலும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்க முடியாது என்று ராதிகா சரத்குமாரை பாராட்டினார்.
திரைப்படங்களில் நடிப்பதைவிட இது போன்ற படங்களை தயாரிப்பதில்தான் தனக்கு ஆத்ம திருப்தி இருப்பதாகவும், அதற்காகவே இது போன்ற படங்களை தயாரிப்பதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.
அதேபோல் சினிமாவில் யாருக்கும் நான் போட்டியாக வரவில்லை, யாரையும் தாண்டிச் செல்ல வரவில்லை, என்னை இப்படியே விட்டு விடுங்கள். இது போன்ற படங்களை தயாரித்துக் கொண்டு, பலருடன் பணியாற்றிக் கொண்டு செல்கிறேன் எனவும் கூறினார்.
இது தவிர படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், பால சரவணன், முனிஸ்காந்த் ராமதாஸ் போன்ற நடிகர்கள் பற்றி பேசும்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு கலாய்த்தார்.
நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …


