டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி“ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டொவினோ தாமஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்பார்ப்பை தூண்டும் கூட்டணி
‘ஜன கண மன’ புகழ் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமாவாக (Period Action Drama) செதுக்கப்பட்டுள்ளது.
டொவினோ தாமஸ் இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட மற்றும் மாஸான தோற்றத்தில் இதில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோகர் நடித்துள்ளார். மேலும் விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் சிறப்பம்சங்கள்:
கதைக்களம்: 1950-60களில் கேரளாவின் மலைப்பகுதிகளில் வாழ்ந்த குடியேற்ற விவசாயிகளின் வாழ்வியலை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா வெளியீடு:
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
படத்தின் ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.
இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்றுகின்றனர். உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.
கோடை விடுமுறை கொண்டாட்டம்:
ஏற்கனவே வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சமீபத்தில் வெளியான ‘காட்டுச்செம்பகம்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
விஷு பண்டிகை மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் இந்தப் படம், டொவினோ தாமஸின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!


