மத்திய அரசு திமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், காங்கிரசுக்கு அதிகளவு இடங்களை தருவது முடியாத காரியம் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. ஸ்டாலின் ஆளுமைக்கு இது மிகப்பெரிய சவாலானது தான். காங்கிரசுக்கு இன்றைக்கு தான் பப்ளிக் எக்சாமுக்கு போயிருக்கிறார்கள். அவர்கள் 39+2 இடங்கள் கேட்பதாக தகவல்கள் வெளியாகின்றன. திமுகவினர் இன்றைக்கு ராகிங்கை தொடங்கி இருப்பார்கள். காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் கிறிஸ் ஜோடாங்கரிடம், தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ஊடகங்கள் வதந்தியை பரப்புவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்.
வதந்திகளை பரப்பியது யார்? பிரவீன் சக்கரவர்த்தி, ஜோடாங்கர், மாணிக்கம் தாகூர், கே.சி. வேணுகோபால் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தவெகவை புகழ்ந்து பேசினார்கள். இன்றைக்கு பத்திரிகையாளர்கள் கேட்கிற போது யார் பேசினார்கள் என்கிறார். இன்றைக்கு பேச்சுவார்த்தைக்கு போகிறபோது காங்கிரஸ் பேரியக்கம். பெரிதாக வளர்ந்துவிட்டோம் என்கிற மமதை அவர்களிடம் உள்ளது. அவர்களுக்கு டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் வேப்பிலை அடித்து, நார்மலுக்கு வாங்க என்று சொல்வார்கள்.

திமுக தரப்பில் 25 இடங்களும், ஒரு ராஜ்யசபா இடமும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரிஷ் ஜோடாங்கர் 39 இடங்கள் என்று சொன்னால், திமுக பேச்சுவார்த்தைக்குழுவினர் சிரிப்பார்கள். நல்ல வேலை பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லை. அவர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உள்ளே நடந்ததை வெளியே சொல்லவும் முடியாது. கடைசியில் கொடுப்பதை கொடுங்கள் என்று வரலாம். அவர்கள் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம். ஆனால் நேரமில்லை. இன்னும் 10 நாட்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். இந்த நாடகம் எல்லாம் விரைவில் முடிந்துவிடும். ஏற்கனவே நடைபெற்ற ஓபிஎஸ் நாடகம் முடிந்துவிட்டது. ஸ்டாலினை சேர்த்துக்கொண்டது ஸ்டாலினின் பெருந்தன்மையாகும். முதலமைச்சரை பொறுத்தவரை இது ஒரு கடுமையான தேர்தல். ஒவ்வொரு தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவதற்கான வழியை பார்க்க வேண்டும். ஆளுநர் அவருக்கு எதிராக உள்ளது.
பெரும்பான்மைக்கு இடம் கிடைக்காவிட்டால் பாஜக அரசியல் சித்தி விளையாட்டு செய்யும். எனவே கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை குறைத்தும், உதயசூரியன் போட்டியிடும் இடங்களை குறைக்காமலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றபடி ஓபிஎஸ் சொல்கிற வாதங்கள் எல்லாம் ஏற்புடையது கிடையாது. இன்றைய நிலைமையில் அவர் ஒரு ஆளுமை எல்லாம் கிடையாது. அவரை கட்சியில் சேர்த்த மு.க.ஸடாலினுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். ஒபிஎஸ்க்கு சபாநாயகர் பதவி தருவதாக கூறிதான் அழைத்துச்சென்றுள்ளனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கவுண்டர் கட்சியாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தோற்றபோது ஓபிஎஸ் இந்த குற்றச்சாட்டை வைத்தார். ஓபிஎஸ் நேற்றுவரை ஒரு சமுதாயத்தின் அடையாளமாக இருந்தார். ஆனால் திமுக என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாகும். இனிமேல் ஓபிஎஸ் அதுபோன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். அதற்கு காரணம் திமுகவுக்கு சாதி, மத அடையாளம் தேவையில்லை. திமுக என்பது அண்ணா தொடங்கிய கட்சி. அதில் ஸ்டாலின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தினாலும், அது எல்லோருக்குமான கட்சியாகும். அதிமுகவையும் எம்ஜிஆர் அப்படிதான் நடத்தினார்.
சாதியை தாண்டி சாதிப்பது தான் அரசியல் ஆளுமை. அனைத்து தரப்பினருக்குமான தலைவராக அவர் மாறவில்லை. இந்த தேர்தலில் திமுகவுக்கு இருக்கும் பெரிய பலம் முதல்வர் வேட்பாளர். அது மு.க.ஸ்டாலின். இண்டாவது பலம் உதயசூரியன் சின்னம். மற்றபடி மெகா கூட்டணி எல்லாம், ஒரு பெரிய பின்னடைவு. இது பின்னர் தெரியும். காங்கிரஸ், தேமுதிக, ஓபிஎஸ் போன்றவர்கள் பலம் கிடையாது. திமுகவில் இளைஞர்கள், பல்வேறு தொழில்களை சேர்ந்த நபர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


