Homeசெய்திகள்சினிமாசட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!

-

- Advertisement -
நடிகை ஹன்சிகா விவாகரத்து
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி,  தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளார்.

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.. இவருக்கும் பிரபல தொழிலதிபர் சொஹைல் கதூரியாவுக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் கடந்த 2022ம் ஆண்டி டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம் மற்றும் காதல் கதை  ‘Love Shaadi Drama’ என்ற பெயரில் ஓடிடி தளத்திலும் வெளியானது.

​ இந்நிலையில் திருமணமான சில காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பதால் பிரச்சனை என எண்ணி தனிக்குடித்தனம் சென்ற பிறகும் இருவருக்கும் இடையேயான கருத்து மோதல்கள் முடிவுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக,  கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 2 முதல் தனித்தனியாக அவரவர் பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிகிறது.

we-r-hiring

நடிகை ஹன்சிகா விவாகரத்து

நிபந்தனைகள் இல்லா விவாகரத்து:

​இதனையடுத்து  பரஸ்பர சம்மதத்துடன் (Mutual Consent) விவாகரத்து கோரி ஹன்சிகா மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை மும்பையில் உள்ள பண்ட்ரா குடும்ப நல நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த விவாகரத்து வழக்கில் முக்கிய அம்சமாக, ஹன்சிகா தனது கணவரிடமிருந்து எந்தவிதமான ஜீவனாம்சமும் (Alimony) கோரவில்லை. ​இருதரப்பினரும் சுமூகமாகப் பேசிப் பிரிவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

​​பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தரப்பில் பலமுறை சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், இருவராலும் இணைந்து வாழ முடியாது எனக் கூறியதால் விவாகரத்து முடிவை எடுத்ததாகத் தெரித்தனர்.  தற்போது, மும்பையில் உள்ள பண்ட்ரா குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து வழங்கியதைத் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஹன்சிகா இனி தனது திரைப்பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்தப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ