Homeசெய்திகள்அரசியல்"உண்மைக்கு மாறான கருத்து": தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி!

“உண்மைக்கு மாறான கருத்து”: தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசுகையில், “திமுக குடும்பத்தின் மிரட்டல் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதற்கு நேரடியாகப் பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் அறிக்கை

we-r-hiring

தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:”தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத்துறையினர் மற்றும் எனது ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.”

மேலும், தனது பாணியில் “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று அந்த அறிக்கையை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார்.

 

MUST READ