Homeசெய்திகள்அரசியல்ஸ்டாலினின் 200+ மாஸ்டர் பிளான்: திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு - ஒரு மெகா...

ஸ்டாலினின் 200+ மாஸ்டர் பிளான்: திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு – ஒரு மெகா ரிப்போர்ட்!

-

- Advertisement -

திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிலவரம் ​திமுக தலைமையிலான “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்” தற்போது வரை காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளுடன் பேரம் – 200 தொகுதிகளை பிடிக்க திட்டம்

we-r-hiring

திமுகவின் ‘மெகா’ இலக்கு: கடந்த முறை 133 இடங்களில் வென்ற திமுக, இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கிவிட்டு, உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 200 தொகுதிகளுக்கு மேல் தனித்து போட்டியிட அல்லது உதயசூரியன் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகளை போட்டியிட வைக்கத் திட்டமிட்டுள்ளது.

​காங்கிரஸ் உடன்பாடு: பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மார்ச் 4-ம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 தேர்தலை விட (25 இடங்கள்) இந்த முறை 3 இடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

​மதிமுகவின் நிலைப்பாடு: வைகோ தலைமையிலான மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 இடங்களில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட அக்கட்சி சம்மதித்துள்ளது.

சிபிஐ(எம்)யுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6 தொகுதிகளுக்கு மேல் கேட்டு திமுகவுடன் போராடி வருகிறது. ஆனால் பேச்சு வார்த்தை எட்டவில்லை. அதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் கடந்த முறையை விட அதிக இடங்களைக் கோருவதால் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​புதிய வரவுகள்: கடந்த பிப்ரவரி மாதம் கூட்டணியில் இணைந்த தேமுதிக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு (டி.ஆர். பாலு தலைமையில்) தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

​மீதமுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் இறுதி செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது

MUST READ