spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்

நடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்

-

- Advertisement -

நடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்- இது பாடம்

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுல் திடீரென மரணம் அடைந்ததால் வனிதா பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சமூக வலைதளத்தில் சர்ச்சையிலும், பரபரப்பிற்கு பஞ்சமில்லாமலும் இருந்து வந்த சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் தற்போது பிஸினஸில் இறக்கி தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருந்து வருகிறார்.

நடிகை வனிதாவின் 3 வந்து கணவர் மரணம்

we-r-hiring

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளின் மகள் வனிதா, சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் விஜயுடன் நடித்திருந்தாலும் பெரிதாக அவருக்கு கை கொடுக்க வில்லை.

அதன் பின்னர் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்குப் போட்டார். திருமண வாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. முதல் கணவரை விவாகரத்து செய்த கையோடு இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகை வனிதாவின் 3 வந்து கணவர் மரணம்

அதுவும் சிறப்பாக அமையவில்லை. வேறு வழியில்லாமல் அந்த திருமண உறவையும் முறித்துக் கொண்டு 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே பெற்றோர்களுடன் தகராறு ஏற்பட்டு தந்தை விஜயகுமாருடன் நடு ரோட்டில் சண்டைப் போட்டுக் கொண்டார்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கலக்கினார். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மேலும் பிரபலம் அடைந்தார். அதன் மூலம் விஜய் டிவி போன்ற சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காமெடி நடிகர்களுடன் இணைந்து சில புரோகிறாம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

நடிகை வனிதாவின் 3 வந்து கணவர் மரணம்

அந்த கணவராலும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த வனிதா நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு முன்பு பீட்டர் பவுலுக்கு அதிகமான குடி பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்னர் குடியை நிறுத்தி விடுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

சொன்னபடி நடந்து கொள்ளாமல் தொடர்ந்து குடித்து கொண்டும், வனிதாவுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து விட்டதாக வனிதா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பீட்டர் பவுல் நேற்று திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு வனிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ” நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவி செய்வார் என்று தன் தாய் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பாடம் எல்லோருக்கும் பொருந்தும் என்று செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ