Homeசெய்திகள்இந்தியாபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி

-

- Advertisement -

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை முழுமையாகவும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் இடையே மோதல் தொடங்கி 27 நாட்களாகும் நிலையில் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. இருப்பினும் பல்வேறு வழிகளில் எரிபொருள் வரவழைப்பை இந்திய அரசு உறுதி செய்வதோடு போதுமான எரிபொருள் கையிருப்பையும் உறுதி செய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயாக இருந்த நிலையில் அதனை 3 ரூபாயாக மத்திய அரசு குறைத்துக் கொண்டுள்ளது அதேபோல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் இருந்த நிலையில் அதனை முழுமையாக ரத்து செய்துள்ளது. வழக்கமான நேரங்களில் கலால் வரி குறைக்கப்பட்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்திருக்கும்.

we-r-hiring

ஆனால் இப்போது மேற்கு ஆசிய நாடுகள் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாலும் பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு கூடுதல் செலவினம் ஆவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க கூடிய வகையில் கலால் வரி எனும் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் எவ்வித விலை மாற்றமின்றி எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியும் எனும் நிலையை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

நயாரா பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

MUST READ