சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் எரிபொருள் நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) தனது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாடு முழுவதும் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை மாற்றத்தின்படி,
பெட்ரோல்: லிட்டருக்கு ₹5.30 உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல்: லிட்டருக்கு ₹3.00 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹107.93 ஆகவும், டீசல் விலை ₹97.22 ஆகவும் அதிகரித்துள்ளது.இடத்திற்கு இடம் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

காரணம் என்ன?
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாகவே நயாரா நிறுவனம் இந்த விலையேற்றத்தை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கவலை:
ஏற்கனவே சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தனியார் நிறுவனத்தின் இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் விலையை உயர்த்துமா என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை கடக்க இனி கட்டணம்? ஈரான் அரசு அதிரடி முடிவு!
