Homeசெய்திகள்தமிழ்நாடு"போதைப் பொருள் புகாரை கசியவிட்டதா காவல்துறை?" - கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு டிடிவி தினகரன்...

“போதைப் பொருள் புகாரை கசியவிட்டதா காவல்துறை?” – கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

-

- Advertisement -

கோவையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்த கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்."போதைப் பொருள் புகாரை கசியவிட்டதா காவல்துறை?" - கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதன், சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். கல்லூரியில் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் அமுதன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

we-r-hiring

காவல்துறை மீது பாயும் குற்றச்சாட்டு
மாணவர் அமுதன் அளித்த தகவலின் ரகசியத்தைக் காத்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறையே, அந்தத் தகவலை வெளியில் கசியவிட்டுள்ளதாக மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை மாணவர்களுக்கு இடையேயான கோஷ்டி மோதலாகக் காட்டி, அமைச்சர்களும் காவல்துறையினரும் பிரச்சனையை மூடி மறைக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டிடிவி தினகரன் சாடல்
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “போதைப் பொருள் குறித்து புகார் அளிக்கும் மாணவரே சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்குத் தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. இதனை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் மாணவர்களின் முன்னிலையில் வெறும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பதால் எந்தப் பயனுமில்லை. மாணவர் அமுதன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

கோவை கல்லூரி மாணவன் அமுதன் உயிரிழப்பு: “இது கோஷ்டி மோதல் அல்ல… திட்டமிட்ட படுகொலை!” – பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!

MUST READ