முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைந்த நடிகர் விவேக்கின் இயற்கைச் சேவையை நெஞ்சில் ஏந்தி, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரம்மாண்ட பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் சார்பில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் வளத்தைப் பெருக்கும் நோக்கில் ‘பசுமை இயக்கம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 50 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்டில் 20 லட்சம் மரக்கன்றுகள்!
இவ்வியக்கத்தின் தொடக்கமாக, நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்துல் கலாம், நடிகர் விவேக்கிற்குச் சமர்ப்பணம்
இத்திட்டம் குறித்துப் பேசிய அண்ணாமலை:
“இந்தியாவின் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பசுமை இந்தியா கனவையும், கோடி மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாகக் கொண்டு செயலாற்றிய மறைந்த சின்னக்கலைவாணர் நடிகர் விவேக்கின் அளப்பரிய இயற்கைச் சேவையையும் நெஞ்சில் ஏந்தி இந்தப் பசுமைப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் பசுமையான தமிழகத்தைப் படைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.” எனக் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பசுமைப் பயணத்தில் இளைஞர்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைந்த நடிகர் விவேக்கின் இயற்கைச் சேவையை நெஞ்சில் ஏந்தி, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரம்மாண்ட பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
