தவெகவில் உள்ள பெண்களை விலை மாதர் என்ற பொருள் படும்படி ஆபாசமாக பேசிய அறிவியல் சிந்தனையாளர் பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும் தவெக கட்சியின் தலைவருமாகிய விஜய் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.


தமிழ்நாடு பகுத்தறிவு மிக்க சிறந்த மாநிலம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தப்பின்னர் சில பெண்களின் பேச்சை நினைத்தால் கவலைப்படும்படி இருக்கிறது என்று தனியார் யூடியூப் சேனலில் பொன்ராஜ் பேசியுள்ளார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில் “நாங்கள் விஜய்க்கு அக்காவாகவும் இருப்போம், தங்கையாகவும் இருப்போம், அவ்வளவு ஏன் தேவைப்பட்டால் பொண்டாட்டியா கூட இருந்துவிட்டு போகிறோம்” என்று ஒரு பெண் பகிரங்கமாக பேசுகிறார். இன்னொரு பெண் “எனக்கு என் கணவரை விட விஜய் மாமாவை ரொம்ப பிடிக்கும்” என்று பேட்டியளிக்கிறார். “நான் விஜய்யை 30 வருஷமா காதலிக்கிறேன், அதை அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நேரடியாக சொல்லியிருக்கிறேன் என்று பொது தளத்தில் சிறிதும் வெட்கம் இல்லாமல் பேசியிருக்கிறார்.
இன்னும் ஏராளமான பெண்களும் ஆண்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தப்பின்னர் தான் இது போன்றவர்களைப் பற்றி தெரியவருகிறது. இவர்களை நினைத்து கவலைபடாமல் இருக்க முடியவில்லை என்றும் இப்படி பேசுகின்றவர்கள் “விபச்சாரி” களாகத்தான் இருக்க முடியும் என்றும் பொன்ராஜ் பேசியிருக்கிறார்.
பொன்ராஜ் பேசிய வார்த்தையின் பதங்கள் வேண்டுமானால் கொச்சையாக இருக்கலாம், ஆனால் அவர் பேச்சில் சமூக பொறுப்பு இருந்தது. அய்யோ, ஒரு சமூகம் நம் கண்முன்னே பாழாய் போகிறதே என்கிற எதார்த்த கவலையில் அப்படி பேசியிருப்பதை சாதாரணமானவர்களுக்கும் புரிந்திருக்கிறது. ஆனால் விஜய்க்கு மட்டும் புரியவில்லை.
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் கொடுத்துள்ளார். ஒரு கட்சியின் தலைவர் எந்தெந்த காரணங்களுக்கு நேரில் சென்று புகார் கொடுக்க வேண்டும், எந்தெந்த காரணங்களுக்கு கட்சி நிர்வாகிகளை அனுப்ப வேண்டும், வழக்கறிஞர்களை அனுப்பி புகார் கொடுக்க வேண்டும் என்கிற குறைந்தபட்சம் விபரம் கூட விஜய்யிடம் இல்லை.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த கட்சி தலைவர்களும் நேரில் சென்று புகார் கொடுக்க மாட்டார்கள். குறிப்பாக பாலியல் தொடர்பான, பெண்கள் தொடர்பான புகார்களை கட்சி தலைவர்கள் எவரும் நேரில் சென்று புகார் அளித்ததில்லை. அப்படி கொடுக்கவும் மாட்டார்கள்.
தவெக தலைவர் விஜய் கொடுத்த புகாரின் மீது காவல்துறையினர் பொன்ராஜ் மீது (FIR) வழக்கு பதிவு செய்வார்கள். ஒரு கட்சி தலைவர் புகார் கொடுத்திருப்பதால் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்வார்கள். உடனடியாக வழக்கை நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்வார்கள். அப்போது விஜய் நீதிமன்றத்திற்கு சென்று கூண்டில் ஏறி சாட்சி சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்போது விஜய்யின் மனைவி சங்கீதா குறித்தும், திரிஷா குறித்தும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புவார்கள். எல்லாவற்றிற்கும் விஜய் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
பொன்ராஜ் பேசியது தவறு என்று கருதியோ அல்லது அரசியல் நாடகமோ எதுவாக இருந்தாலும் வழக்கறிஞர்கள் மூலமாக புகார் கொடுத்திருக்க வேண்டும். அவரே சென்று புகாரை கொடுத்தப் பின்னர் விஜய் மீது இருந்துவந்த மிச்சம் மீதி மரியாதையும் சுத்தமாக போய்விட்டது. அவரோ அல்லது அவருடைய கட்சியை சேர்ந்த நிர்வாகிகளோ உணர்ச்சிவசப்பட்டு பேசும் அந்த பெண்களுக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். அவர்களின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். இயன்றவரை அதுபோன்ற பேச்சுக்கள் இனிமேல் யாரும் பேசாத அளவிற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுபோன்ற செயல்கள் எதுவும் செய்யாமல் பொன்ராஜ் மீது புகார் மட்டும் கொடுப்பது நியாயமற்ற செயல். அவர் கொடுத்த புகாரில் அவரே சிக்கிக் கொண்டார் என்பது விரைவில் புரிந்துக்கொள்வார்.
எங்கே இருந்தீர்கள்?” – தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்!
