Homeசெய்திகள்அரசியல்பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமார் காங்கிரஸில் இணைந்தார்!

பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமார் காங்கிரஸில் இணைந்தார்!

-

- Advertisement -

தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான ஜி.கே.எம். தமிழ்குமாா் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமார் காங்கிரஸில் இணைந்தார்!டெல்லியில் நடைபெறவுள்ள ஒரு முக்கிய நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் ஆகியோா் முன்னிலையில் ஜி.கே.எம். தமிழ்குமாா் அதிகாரப்பூர்வமாகத் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டாா். இதற்காக டெல்லி சென்று அவருக்கு, முறைப்படி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பெண்ணாகரம் தொகுதியில் போட்டி?

we-r-hiring

தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் தேர்தலில், திமுக கூட்டணியில் பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், அங்கு அக்கட்சியின் வேட்பாளராக ஜி.கே.எம். தமிழ்குமரன் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.கே.எம். தமிழ்குமரன், பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே. மணி அவர்களின் மகன் ஆவார். இவரது தந்தை ஜி.கே. மணி தற்போது பெண்ணாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (PMK சார்பில்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விலகலுக்கான பின்னணி:

கடந்த காலங்களில் பாமக இளஞ்சங்கத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்க்குமார், பாமக தலைவர் அன்புமணியுடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அரசியலில் அமைதி காத்து வந்த அவர், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தில் பாமகவின் மிக முக்கியமான முகங்களில் ஒருவரான ஜி.கே.மணியின் மகன், அக்கட்சியின் கூட்டணிக்கு மாற்றான காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது தர்மபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பாமகவிற்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

​தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டி: ஜான் பாண்டியன் அதிரடி அறிவிப்பு!

MUST READ