Homeசெய்திகள்சினிமாபிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

-

- Advertisement -

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளாா்.பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…இது குறித்து அவர் வெளிட்டுள்ள இரங்கல் கறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. எவரையும் அசைத்துப் பார்க்கக் கூடியது. இந்தத் துயர்மிகு வேளையில் சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவரது கரம்பற்றிக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளாா்.

we-r-hiring

தமிழக முதல்வரை தொடர்ந்து ஆந்திர முதல்வர் பவன் கல்யாணும் அவரது இரங்கலை பதிவு செய்துள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,  “புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களின் தாயார் சுவர்ணலதா அவர்கள் காலமானார் என்பதை அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தியை அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தாயாரின் இழப்பால் துயரத்தில் இருக்கும்பிரகாஷ் ராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

MUST READ