முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன்லால் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 4ல் வெளியாகிறது என நடிகர் மோகன் லால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து பேட்ரியாட் என்ற படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னணி நட்சத்திரங்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா, ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசை அமைத்துள்ளார்.
முன்னதாக இப்படம் ஏப்ரல் 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மே 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகிற 4ம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் மோகன் லால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

