Homeசெய்திகள்சினிமாவிவகாரத்தை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய சீரியல் நடிகை!

விவகாரத்தை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய சீரியல் நடிகை!

-

- Advertisement -

சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவகாரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முள்ளும் மலரும்’ சீரியல் முலமாக பிரபலம் ஆனவர் ஷாலினி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன் ஷாலினி கலந்துகொண்டார்.

we-r-hiring

ஷாலினி ரியாஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், தன்னுடைய கணவர் ரியாஸ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சித்திரவதை செய்வதாகவும் ஷாலினி முன்னர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஷாலினி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக போஸ்ட் டிவோர்ஸ் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புதுமையான போட்டோஷூட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“குரலற்றவர்களாக நினைக்கும் பெண்களுக்கு ஒரு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி

மோசமான திருமணத்தை விட்டு வெளியே வருவது சகஜம் தான். விவாகரத்து ஒரு தோல்வி அல்ல!!! இது உங்களுக்கு ஒரு திருப்புமுனை மற்றும் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

திருமணத்தை விட்டுவிட்டு தனித்து நிற்க மிகுந்த தைரியம் தேவை. அதனால் வெளியில் இருக்கும் என் துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பணம் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by shalini (@shalu2626)

MUST READ