Homeசெய்திகள்இந்தியாஇப்படியுமா இருப்பார்கள் - குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

-

- Advertisement -

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.இப்படியுமா இருப்பார்கள் - குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

we-r-hiring

இந்த விவகாரம் எல்.எம்.டி  காவல் நிலையத்திற்கு எட்டிய நிலையில், போலீசார் இருவருக்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த லலிதா திடீரென தனது கழுத்தில் இருந்த தாலியையும், காலில் இருந்த மெட்டியையும் கழற்றி இன்ஸ்பெக்டர்  மேஜை மீது வைத்துவிட்டு, எனக்கு கணவனும் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம் எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டார். மனைவி சென்ற சில நிமிடத்திலேயே கணவரும் எனக்கும் குழந்தைகள் வேண்டாம் எனக்கூறி சென்று விட்டார். இதனை எதிர்பார்க்காத போலீசார் இருவரையும் அழைக்க முயன்றும் அவர்கள் திரும்பி பார்க்காமல் சென்று விட்டனர்.

இதனால் இரண்டு சிறுமிகளும் என்ன செய்வதேன்று தெரியாமல் அழ தொடங்கினர். பின்னர் போலீசார் லலிதா பெற்றோரை வரவழைத்து இரண்டு சிறுமிகளையும் ஒப்படைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர் . இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

MUST READ