Homeசெய்திகள்இந்தியாமத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

-

- Advertisement -

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர் கூறியதால் ஏற்பட்ட தகராறால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் ராஜீவ் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென வன்முறையாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.

we-r-hiring

நிகழ்ச்சியின் போது, மணமகள் மேடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, புகைப்படம் எடுக்க இடையூறாக இருப்பதாகக் கூறி, மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மேடையிலிருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மணமகள் குடும்பத்தினர், போட்டோகிராபரை கண்டித்தனர்.

இந்த விவகாரம் குறித்து மணமகள் மற்றும் மணமகன் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அது தீவிரமடைந்து கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் மேஜைகள், நாற்காலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

MUST READ