Homeசெய்திகள்மாவட்டம்தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்

-

- Advertisement -

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு என பெரிய கருப்பன் கூறியுள்ளாா்.தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரிய வழக்கில், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம தள்ளிவைத்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறுவது கற்பனையானது; தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

we-r-hiring

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என பெரியகருப்பன் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எச்சரித்தும் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்… கோதாவில் லீமா ரோஸ்

MUST READ