பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், உலக வரைபடத்தில் அந்நாட்டின் இருப்பே கேள்விக்குறியாகும் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை தொடர்ந்தால், அந்த நாடு உலக வரைபடத்தில் நீடிக்க வேண்டுமா அல்லது வரலாற்றாக மாற வேண்டுமா என்பதை அந்நாடே தீர்மானிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அனுப்கர் பகுதியில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முக்கிய கருத்துகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது, “ஆபரேஷன் சிந்தூர் 1.0 (Operation Sindoor 1.0) நடவடிக்கையின் போது இந்தியா கடைப்பிடித்த நிதானம் இனி காட்டப்படாது. தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தினால், அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் அமைப்புகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இந்தியாவால் பார்க்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். “பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருந்தால், அதன் எதிர்கால இருப்பு குறித்து தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த கருத்துகள் பாதுகாப்பு வட்டாரங்களிலும் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்துள்ளன.
வரலாற்று நெகிழ்ச்சி – சோழர்கால பொக்கிஷம் இந்தியாவிடம் ஒப்படைப்பு…
