“நான் உயிரோட தான் இருக்கேன், இன்னும் சாகவில்லை” என்று செல்வராகவன் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்ப்பதில் கைதேர்ந்தவர் செல்வராகவன்.


நடிகர்களுக்கு இணையாக தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.
தற்போது படங்களில் அதிகமாக நடிக்கவும் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் வாழ்க்கையின் தத்துவங்களை இரண்டே வரிகளில் திருக்குறள் போல அழகாக எடுத்துக் கூறும் வகையில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் , சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல்கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் , “விவேக் நகைச்சுவையில் சொல்வார் , இயக்குனர் ஒவ்வொரு பிரேமையும் கட் செய்துவிட்டார் , இதுவும் அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன் அது ஒரு காலம் ” என்று ட்வீட் செய்திருந்தார் . இதற்கு பதிலளித்த இயக்குனர் செல்வராகவன், “ஏன் நண்பரே ? நான் இன்னும் சாகவில்லை. ஓய்வு இல்லை. எனக்காக சிறிது நேரம் ஒதுக்கினேன். இப்போது நான் திரும்பி வந்துவிட்டேன். என்று பதிவிட்டுள்ளார்”. இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
