Homeசெய்திகள்சிட்லபாக்கம் போலீசாரால் அலைக்கழிக்கப்பட்ட பெண்: சர்வதேச குற்றத் தடுப்புச் சங்கம் கடும் கண்டனம்!

சிட்லபாக்கம் போலீசாரால் அலைக்கழிக்கப்பட்ட பெண்: சர்வதேச குற்றத் தடுப்புச் சங்கம் கடும் கண்டனம்!

-

- Advertisement -

“தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்கள் படை’ போன்ற சிறப்புப் பிரிவுகள் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகின்றன; மாநிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது” என்று சர்வதேச குற்றத் தடுப்புச் சங்கம் (ICPO) கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சிட்லபாக்கம்
​தாம்பரம் அருகே குடும்பப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்குப் போலீஸார் உரிய நீதி வழங்க மறுப்பதாகக் கூறி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் விரிவான விவரம் பின்வருமாறு:

we-r-hiring

கள்ளக்காதல் மற்றும் வரதட்சணைக் கொடுமை
​தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு லோகேஷ் என்ற கணவரும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். லோகேஷ் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு, தனது மனைவி தனலட்சுமியைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார்.
​கணவரின் இந்தத் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த தனலட்சுமி, இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சிட்லபாக்கம் போலீசாரின் அலட்சியம்:
​இது குறித்துப் பாதிக்கப்பட்ட தனலட்சுமி, சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுக்கடுக்கான புகார்களை அளித்துள்ளார். தான் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ ஆதாரங்களைச் சமர்ப்பித்தும் கூட, காவல்துறையினர் லோகேஷ் மீது எந்தவொரு சட்டப் பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாறாக, வழக்குப் பதிவு செய்யாமல் “நீதிமன்றத்தை அணுகுங்கள்” எனக் கூறி தனலட்சுமியைக் காவல் துறையினர் தொடர்ந்து அலைக்கழித்து வந்துள்ளனர்.

“சிங்கப்பெண் படை வெறும் கண்துடைப்பு!” – சாம் பிரவீன் சாடல்
​காவல்துறையால் கைவிடப்பட்ட தனலட்சுமி, நீதிக்காகச் சர்வதேச குற்றத்தடுப்புச் சங்கத்தின் உதவியை நாடினார். இதனைத் தொடர்ந்து, அச்சங்கத்தின் சமூக நீதிப் பிரிவுத் தலைவர் சாம் பிரவீன், பாதிக்கப்பட்ட தனலட்சுமியுடன் இணைந்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய சாம் பிரவீன்:
​”தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்புக்காகச் ‘சிங்கப்பெண்கள் படை’ உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், உண்மையில் அந்தப் படை பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இரண்டு வயதுக் குழந்தையுடன் தவிக்கும் ஒரு தாய்க்கு, இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அரசாலோ, காவல்துறையாலோ எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை.”

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நீதியையும், அவரது கணவர் மீது உரிய சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

MUST READ