Homeசெய்திகள்இந்தியாவாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!

-

- Advertisement -

Whatsapp User name
இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மை இடம் வகிப்பது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி எமோஜிக்கள், ஆடியோ குறுந்தகவல், ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிகள், புகைப்படம் , வீடியோ மற்றும் ஃபைல்கள் ஷேரிங், இருப்பிடம் (Location) பரிமாற்றம், பணப்பரிவர்த்தனை( whatsapp money), ஸ்டேடஸ் அப்டேஷன் , சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் இந்திய பயனர்களிடையே வாட்ஸ் அப் முக்கிய அங்கம் வகிக்கிறது. தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொண்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது, மொபைல் எண்ணைப் பகிராமல் மற்றவர்களுடன் சாட் செய்ய வாட்ஸ்அப் (WhatsApp) யூசர் நேம் (Username) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் செயலிகளில் இருப்பதைப் போன்று பயனரின் போன் நம்பர் மற்றவர்களுக்குத் தெரியாது.

* இந்த புதிய வசதியின் மூலம் பயனரின் தனியுரிமை (Privacy) பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மெசேஜ் அனுப்பும்போது உங்கள் மொபைல் எண்ணுக்குப் பதிலாக இந்த யூசர் நேம் மட்டுமே காட்டப்படும்.

we-r-hiring

* பயனரை யாராவது யூசர் நேம் மூலம் தேடித் தொடர்பு கொள்ள Username Key அல்லது பிரத்யேக QR Code பயன்படுத்தலாம்.

* இந்த யூசர் நேம் 3 முதல் 35 எழுத்துகள் வரை இருக்கலாம்.

இதனைத்தொடர்ந்து யூசர் நேம் ரிசர்வ் செய்யும் முறை படிப்படியாக வாட்ஸ்அப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யும் பயனர்கள் இப்போதே உங்கள் யூசர் நேமை முன்பதிவு (Reserve) செய்யலாம். அதற்கு வாட்ஸ்அப் செயலியின் Settings (அமைப்புகள்) பகுதிக்குச் சென்று, .Account என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் Username என்பதைத் கிளிக் செய்து பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பெயரை முன்பதிவு செய்யலாம். இதில் இன்ஸ்டாகிராம் (Instagram) அல்லது பேஸ்புக் (Facebook) யூசர் நேமையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம்.

Whatsapp

மத்திய அரசு தடை:

ஆனால் இந்த யூசர் நேம் வசதியினால் மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருந்த ‘யூசர் நேம்’ வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் இந்த புதிய வசதி குறித்து முழுமையான விளக்கம் அளிக்குமாறும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைகள் முடிவடையும் வரை ‘யூசர் நேம்’ வசதியை அறிமுகப்படுத்தக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல அடுக்கு பாதுகாப்பு – மெட்டா விளக்கம் :

வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதியைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய மோசடிகளைத் தடுப்பதற்காக, பல அடுக்கு பாதுகாப்பு வசதிகளை உருவாக்கியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

* வாட்ஸ்அப்பில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் நோக்கில், முக்கியமான பிரமுகர்கள், அரசு அமைப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா (Meta) கணக்குகள் போன்ற முக்கியப் பெயர்களை நிறுவனம் பாதுகாப்பாக வைத்துள்ளது.

மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியிருந்த நோட்டீஸுக்காக இந்த விளக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், பயனர்களின் தகவல்களுக்கும், அடையாளத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ