Homeசெய்திகள்அரசியல்"இதுதான் விஜய் சொன்ன தூய சக்தி அரசியலா?" – த.வெ.க. அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

“இதுதான் விஜய் சொன்ன தூய சக்தி அரசியலா?” – த.வெ.க. அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

-

- Advertisement -

ஒருபுறம் போதைப்பொருள் சர்ச்சை அமைச்சர், மறுபுறம் நிழல் முதலமைச்சராகச் செயல்படும் அமைச்சர், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சியிலேயே லஞ்சம்… இதுதான் ஊழலை ஒழிப்போம் என முதலமைச்சர் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியலா?” என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான விமர்ச்சனங்களை முன்வைத்துள்ளார்.

டிடிவி தினகரன்

we-r-hiring

“சட்டமன்றத்தைச் சூட்டிங் ஸ்பாட் ஆக்கிவிட்டார்கள்!”
சமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியதை விமரிசித்துள்ள டிடிவி தினகரன், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

” ‘தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்’ எனச் சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு, சினிமா வசனங்களை ஒரே டேக்கில் அள்ளிவிட்டார் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய். ஆனால், பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான ‘White Powder’ புகழ் அமைச்சர் மீது இதுவரை முதலமைச்சர் விசாரணை கூட நடத்த முன்வராதது ஏன்?”

“கரூர் சம்பவ விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சி!” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “காவல்துறையின் மூலமாகப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாகக் கூறி, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையையும், அவர்களின் மக்கள் பாதுகாப்புப் பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பொய்த்துறை அமைச்சர் பேசி வருகிறார். இந்த அரைவேக்காட்டுத் தனத்தைக் கண்டும் காணாமல் முதலமைச்சர் விஜய் இருப்பதன் மர்மம் என்ன? இது வழக்கின் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கமே” என்று சாடியுள்ளார்.

வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல்: அரசுக்குக் கோரிக்கை
அரசு வழக்கறிஞர் நியமனங்களில் த.வெ.க. அரசு பெரும் குளறுபடிகளிலும் ஊழல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்குப் பதவி: வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சொந்தக் கட்சியிலேயே வசூல் வேட்டை: அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கச் சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே மூத்த அமைச்சர் ஒருவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக அடுத்தடுத்து புகார்கள் வெளியாகி வருகின்றன.

உண்மையான முகம் அம்பலம்: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, த.வெ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே, தூய சக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இறுதியாக டிடிவி தினகரன் விடுத்துள்ள வலியுறுத்தல்:
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனடியாகக் களைந்து, வெளிப்படையான நடைமுறைகள் மூலம் தகுதியுடைய வழக்கறிஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். மேலும், இந்த லஞ்சப் புகாரில் தொடர்புடையவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி, ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது த.வெ.க. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

MUST READ