இனிமேல் இது என் ஹோட்டலாக இருக்காது என்று நடிகை சதா கண்ணீர் உடன் வீடியோ பதிவிட்டுள்ளார்.
நடிகை சதா இந்திய அளவில் பல மொழிகளில் நடித்த பிரபலமான நடிகை. அவர் தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’, ‘டார்ச்லைட்’ உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்தார்.


கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாத சதா போட்டோகிராபியில் இறங்கினார். இதற்கிடையில் மும்பையில் ‘எர்த்லிங்ஸ் கஃபே’ என்ற ஹோட்டலையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சதா சமீபத்தில் லைவ் வீடியோவில் கண்ணீருடன் பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
” இந்த ஹோட்டலை 2019-ம் ஆண்டு ஆரம்பித்தேன். இந்த வருடம் ஏப்ரல் மாதம் கடையை காலி செய்யும் படி உரிமையாளர் கூறிவிட்டார். அதிர்ச்சியாக இருந்தது. இது என் குழந்தை. மோசமாக இருந்த இடத்தை என் உழைப்பால் மாற்றினேன்.
வேறு வழியில்லை. இந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறேன். இந்த மாதம் 27-ம் தேதிக்குப்பின், இது என் கடையாக இருக்காது’ என கண்ணீர் மல்க சதா பேசியுள்ளது ரசிகர்களை சோகமாகியுள்ளது. பலரும் கமெண்டில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
