spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு

பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு

-

- Advertisement -

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பாடி வன்னியர் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ரவுடியை கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கொரட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கிற கருக்கா சுரேஷ் என தெரியவந்தது. இவர் மீது MKB நகர்,வியாசர்பாடி, புளியந்தோப்பு,மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 3 கொலை வழக்கு உட்பட 30 க்கும் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. முன் விரோதம் காரணமாக பாடி வன்னியர் தெருவில் வைத்து மர்ம நபர்களால் சுரேஷ் என்கிற கருக்கா சுரேஷை ஓட ஓட வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.

we-r-hiring

அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்ற கூடிய மனைவி கமலாவை பார்க்க பாடி பகுதிக்கு வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் சரமாரியாக கருக்கா சுரேஷ் சாலையில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரட்டூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினர். கருக்கா சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்கு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். நடந்த கொலை தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கொரட்டூர் போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ