Homeசெய்திகள்இந்தியாநீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!

-

- Advertisement -

நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி

we-r-hiring

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி (CJP) இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது வன்முறை ஏற்பட்டதால், தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதேவேளையில், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

விரைவு நீதிமன்றங்கள் அறிவிப்பும் தொடரும் போராட்டமும்

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் (Fast Track Courts) அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனத் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த உயர்நிலைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசித்து வருகின்றனர்.

நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம்: “பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்!” – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

MUST READ