நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து உணவுகளும் அத்தியாவசியப் பொருட்களும் பொட்டலங்களாகக் குவிந்து வருகின்றன.
யார் அனுப்பியது என்றே தெரியாமல் திகைக்கும் மாணவர்கள்: வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் நன்றி!
டெல்லி ஜந்தர் மந்தரில் இரவும் பகலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக போராட்டக் களத்திற்கு Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் உணவு விநியோக ஊழியர்கள் வரிசையாக வந்து வண்ணம் உள்ளனர். அவர்கள் கொண்டு வரும் பார்சல்களில் பிரியாணி, ரொட்டி, குடிநீர் பாட்டில்கள், பழங்கள் மற்றும் இரவு நேரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எனப் பல்வேறு உணவுகள் நிறைந்துள்ளன.

“யார் நீங்களோ… ஆனால் நன்றி!”
இந்த உணவுகளையும் பொருட்களையும் யார் ஆர்டர் செய்து அனுப்புகிறார்கள் என்ற விவரம் எதுவுமே பார்சல்களில் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டத்திற்கு நேரில் வர முடியாத பொதுமக்கள், மாணவர்களின் பசியைப் போக்க ஆன்லைன் மூலம் இப்படி உணவுகளைப் பார்சல் செய்து அனுப்பி வருவது தெரியவந்துள்ளது. இந்தச் நெகிழ்ச்சியான சம்பவத்தால் உணர்ச்சிவசப்பட்ட போராட்டக்காரர்கள், தாங்கள் உணவு சாப்பிடும் வீடியோவைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறுகையில், “எங்களுக்காக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அனுப்பும் நல்உள்ளங்கள் யாருவென்றே எங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அன்பு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘மண்ணிலே இன்னும் ஈரமுண்டு’ என்பதை உங்கள் செயலால் நிரூபித்துள்ளீர்கள். எங்கள் போராட்டத்திற்கு நீங்கள் அளிக்கும் இந்த மறைமுக ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நீட் வினாத்தாள் கசிவு – தார்மீக பொறுப்பேற்க மறுக்கும் அமைச்சர் தர்மேந்திரா பிரதான்
