Homeசெய்திகள்இந்தியாஜந்தர் மந்தரில் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நிஹாங்க் சீக்கியர்கள்!

ஜந்தர் மந்தரில் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நிஹாங்க் சீக்கியர்கள்!

-

- Advertisement -

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தன்னிச்சையான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ஜந்தர் மந்தரில் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நிஹாங்க் சீக்கியர்கள்!

தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தக் கோரியும் இரவும் பகலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

we-r-hiring

களமிறங்கிய சீக்கியப் போராளிகள் (Nihang Sikhs)
போராட்டத்தின் முக்கியத் திருப்பமாக, மரபுசார்ந்த ஆயுதங்களுடனும், பாரம்பரிய நீல நிற உடைகளுடனும் சுழலும் சீக்கிய அமைப்பான நிஹாங்க் சீக்கியர்கள் (Nihang Sikhs) ஜந்தர் மந்தருக்கு நேரடியாக வந்து மாணவர்களுக்குத் தங்களது முழு தார்மீக ஆதரவை வழங்கியுள்ளனர்.

“நீதிக்காகவும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் உரிமைகளுக்காகவும் நடக்கும் இந்த அறவழிப் போராட்டம் நியாயமானது. எந்தவொரு பின்னணியும் இன்றித் தன்னிச்சையாகப் போராடும் இளைஞர்களுக்குத் துணையாக நிற்பது நமது கடமை.”  என போராட்டக் களத்தில் நிஹாங்க் சீக்கியப் பிரதிநிதிகள் முழுக்கமிட்டனர். மேலும், மாணவர்களுக்குத் தேவையான உணவு (லங்கர்) மற்றும் பாதுகாப்பு ஆதரவுகளை வழங்கி, அவர்களின் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து நிற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஜந்தர் மந்தரில் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நிஹாங்க் சீக்கியர்கள்!

நாடளாவிய அளவில் பெருகும் ஆதரவு
இளைஞர்களின் இந்த வீரியமிக்க போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன, மாணவர்களின் இந்தக் கோரிக்கை அரசியல் எல்லைகளைக் கடந்து சமூகத்தின் பல்வேறு அமைப்புகளையும் ஒன்றிணைத்துள்ளது. கடுங்குளிரையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் கடந்த சில நாட்களாகத் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் எழுப்பியுள்ள இந்தக் குரல், நாடு தழுவிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதோடு, மத்திய அரசுக்கு நெருக்கடியையும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் பரபரப்பு: CJP பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் நேரில் பேச்சுவார்த்தை!

MUST READ