Homeசெய்திகள்சென்னைஎழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: மீண்டும் தாம்பரத்திற்கு மாற்றப்படும் விரைவு ரயில்கள்!

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: மீண்டும் தாம்பரத்திற்கு மாற்றப்படும் விரைவு ரயில்கள்!

-

- Advertisement -

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில விரைவு ரயில்களை மீண்டும் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எழும்பூர்

we-r-hiring

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் வகையில் ரூ.734.91 கோடி மதிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நடைமேம்பாலப் பணிகள் மற்றும் தற்காலிக மாற்றங்கள்:

எழும்பூர் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் வகையில் 18 மீட்டர் அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்ட இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 500 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட ராட்சத கிரேன்கள் மூலம் இரும்பு கர்டர்கள் நிறுவப்பட உள்ளன.

ஏற்கனவே முதல்கட்டப் பணிகளின் போது உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் போன்ற முக்கிய ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டன. தற்போது 3-ம் கட்டமாக, காந்தி இர்வின் சாலை பகுதியில் உள்ள 1 முதல் 5 வரையிலான நடைமேடைகளில் பணிகள் நிறைவடைந்து, 6 முதல் 11 வரையிலான நடைமேடைகளில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

தாம்பரத்திற்கு மாற்றம் – ரயில்வே அதிகாரிகள் விளக்கம்:

இதன் காரணமாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களை மீண்டும் தாம்பரத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்:

“நடைமேம்பாலம் அமைக்கும் பணியால் சில விரைவு ரயில்களை தாம்பரத்திற்கு மாற்றுவது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும். பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் ரயில் சேவைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் மின்சார ரயில்களை 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!

MUST READ