Homeசெய்திகள்இந்தியாரூ.100 கோடி மதிப்பில் 10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ஒன்றிய அரசு அதிரடி...

ரூ.100 கோடி மதிப்பில் 10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ஒன்றிய அரசு அதிரடி ஒப்புதல்!

-

- Advertisement -

இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், போலி நோட்டுகள் புழக்கத்தைத் தடுக்கும் வகையிலும், பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளைச் சோதனை அடிப்படையில் வெளியிட ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

பிளாஸ்டிக்

we-r-hiring

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அளித்த முக்கியப் பரிந்துரையை ஏற்று, முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புடைய நோட்டுகளைப் பிளாஸ்டிக்கில் அச்சடித்து வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சோதனை முறையில் அறிமுகம்:

இந்தத் திட்டத்தின் கீழ், தலா 100 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் சோதனை அடிப்படையில் அச்சிடப்பட்டுச் சந்தையில் புழக்கத்தில் விடப்பட உள்ளன. இதற்காகத் நாட்டின் முக்கிய 5 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள காலநிலை மற்றும் புழக்கச் சூழலுக்கு ஏற்ப இந்த நோட்டுகளின் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆய்வு செய்யப்படவுள்ளது.

பிளாஸ்டிக் நோட்டுகளின் சிறப்பம்சங்கள்:

  • நீடித்த உழைப்பு: தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை விடப் பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகள் நீண்ட காலம் சேதமடையாமல் உழைக்கக்கூடியவை.

  • சுத்தம் மற்றும் சுகாதாரம்: தண்ணீரில் நனையாது, கசங்காது மற்றும் எளிதில் அழுக்கடையாது என்பதால் கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

  • போலி நோட்டுகளுக்குக் முற்றுப்புள்ளி: உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுவதால், இந்த நோட்டுகளைப் போலியாக அச்சடிப்பது மிகக் கடினம்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதன் செயல்பாடு மற்றும் வரவேற்பைப் பொறுத்து, எதிர்காலத்தில் மற்ற மதிப்பிலான நோட்டுகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 காமன்வெல்த் விளையாட்டு: ஒரே தொடரில் வெண்கலப் பதக்கங்களை அள்ளிய இரட்டைச் சகோதரிகள்!

MUST READ