Homeசெய்திகள்தமிழ்நாடு"சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?" — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

“சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?” — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

-

- Advertisement -

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தவெக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் செந்தில்வேல் முன்வைத்துள்ள அதிரடியான கருத்துகள் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன."சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?" — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

உயர் நீதிமன்றத்தின் சம்மட்டி அடி: பணி ஆணைகள் ரத்து!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்குத் தவெக அரசு சார்பாக அரசுப் பணி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், “சாதாரண விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது போல இதைக் கருத முடியாது; இது உச்ச நீதிமன்ற விதிகளை மீறிய செயல்” என்று கூறி உயர் நீதிமன்றம் அந்த பணி நியமனங்களை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து சுட்டிக்காட்டிய செந்தில்வேல், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக பல ஆண்டுகள் கடினமாகப் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இத்தகைய வித மீறல்கள் பெருமளவில் அநீதியை இழைக்கும் என்றே நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

we-r-hiring

“சொந்தப் பணத்தில் நிவாரணம் வழங்க வேண்டியதுதானே?”
நீதிமன்றத்தின் கண்டனத்தைக் சுட்டிக்காட்டிய அவர், ஒரு படத்தின் மூலம் பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனது சொந்த வருவாயிலிருந்து நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். மாறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவது தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்தும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது."சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?" — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: அரசின் மௌனம் ஏன்?
இதற்கிடையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, ‘வந்தே மாதரம்’ முதலிடத்தில் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சட்டமன்றத்தில் “தமிழ்த்தாய் வாழ்த்து எங்கள் தலைவரின் உயிருக்கு நிகரானது” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முழங்கிய நிலையை நினைவுகூர்ந்த செந்தில்வேல், தற்போது நேர்ந்த இந்த அவமானத்தைக் கண்டு அரசு அமைதி காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் ஆளுநர் தரப்பில் நெருக்கடி வந்தபோது உறுதியாக எதிர்த்து நின்றதைச் சுட்டிக்காட்டிய அவர், தவெக அரசு மத்திய அரசு மற்றும் ஆளுநர் விவகாரங்களில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறி தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.

விஜய்க்கு நீதிமன்றத்தின் அதிரடி குட்டு! – அரசுப் பணி வழங்கிய அரசாணைகள் ரத்து பின்னணி என்ன? – மூத்த வழக்கறிஞர் கோடீஸ்வரன் பேட்டி

MUST READ