HomeBreaking News152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!

152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!

-

- Advertisement -

நீட் எஸ்.எஸ். (NEET SS) விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குரிய 152 அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (AIQ) மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசின் முழுமையான சட்ட மற்றும் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்று அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!

உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருந்த அரசு மருத்துவர்களுக்கான 152 உயர்சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற வேண்டும் என கடந்த மே 29 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

we-r-hiring

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மேற்கண்ட 152 இடங்களை உடனடியாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், நீட் எஸ்.எஸ். கட்-ஆஃப் (Cut-off) குறைக்கப்படும் பட்சத்தில், அதில் 50 சதவீத இடங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இருப்பினும், கட்-ஆஃப் குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின்போதே அறிவிக்கப்படும் என்பதால், அதற்குள் இந்த இடங்கள் அனைத்தும் அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டுவிடும். இதனால் காகித அளவில் 50% இடங்கள் திரும்பக் கிடைக்கும் எனக் கூறப்பட்டாலும், நடைமுறையில் அரசு மருத்துவர்களுக்கு இதன் பலன் கிடைக்க வாய்ப்பில்லை என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் போராட்டத்திலும் நிர்வாகத்திலும் தமிழக அரசு தோல்வி என ஆவேசம்
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை ஆரம்பம் முதலே அலட்சியமாக இருந்ததாக அரசு மருத்துவர்கள் சங்கம் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது, அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்றுக்கு முன்பே, மாநில கலந்தாய்வை அவசரமாக நடத்தி 152 இடங்கள் காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது பல சந்தேகங்களை எழுப்புகிறது. வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகத் தவறியதுடன், நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய சூழலே நிலவியது. மேலும், 152 இடங்களைச் சரண்டர் செய்ய அரசுத் தரப்பில் ஒப்புக்கொண்டதே இந்தத் பின்னடைவுக்கு முதன்மைச் காரணம்.

இந்த இடங்கள் கைமாறுவதைத் தடுக்க சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை.  “அரசுப் பணியில் இருந்துகொண்டே தேர்வுக்குத் தயாராகுபவர்கள், வீட்டில் இருந்து படிப்பவர்களுடன் எப்படிப் போட்டியிட முடியும்?” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா எழுப்பிய முக்கியமான வாய்மொழிக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வலுவான வாதங்களை முன்வைக்கத் தவறிவிட்டனர்.

பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பேரிழப்பு
இது வெறும் அரசு மருத்துவர்களுக்கான பின்னடைவு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய 152 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை தமிழ்நாடு இழப்பதற்குச் சமம் என்று சங்கம் கவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு காட்டிய தொடர் மெத்தனப் போக்கினால் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மத்தியில் ஆழ்ந்த வேதனையையும், கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி? பாஜகவின் காய்நகர்த்தல்களும் தமிழக அரசியலும்! சீக்ரெட்’ உடைத்த ஆளூர் ஷானவாஸ்!

MUST READ