ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படப் பாடல்!
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் கதாநாயக நடிகரான யோகி பாபுவின் 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் புதிய பாடலான ‘பொறு மனமே பொறு’ அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரைப்பட இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பிரபல கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

300-வது மைல்கல் திரைப்படம்
இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில், தேவ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கபாண்டி மற்றும் தங்கபாண்டி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபுவின் திரைப்பயணத்தில் 300-வது மைல்கல் திரைப்படமாக அமையும் இந்தப் படத்தில், அனாமிகா மஹி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், ‘மைனா’ நந்தினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பழைய வாகனங்களை விற்பனை செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் பாடல்
ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘பொறு மனமே பொறு’ பாடல் மெலடி ரகத்தில் அமைக்கப்பட்டு கேட்கும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. பாடகர் ஹ்ருதய் பாடியுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் சினிமா ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஜெயராம் – அஸ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
