சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாட்டைச் சரிபார்க்கும் பணி, சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுவின் அடிப்படையில் ஆய்வு
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் முறையான மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி இந்தப் பரிசோதனைப் பணிகள் தொடங்கின. இன்று மூன்றாவது நாளாக இந்தச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
7 நாட்களில் 14 வாக்குச்சாவடி இயந்திரங்கள் பரிசோதனை
மு.க.ஸ்டாலின் அளித்த மனுவின்படி, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 001, 004, 017, 028, 032, 075, 078, 079, 084, 087, 112, 122, 157, 170 ஆகிய 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்காகத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நாளொன்றுக்கு இரண்டு வாக்குச்சாவடி இயந்திரங்கள் வீதம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 7 நாட்களில் இந்த 14 இயந்திரங்களும் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்வு: சென்னையில் சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனை! இன்றைய நிலவரம் என்ன?
