புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் துணை இயக்குநர் (நிர்வாகம்) பதவிக்கு, பணிமாறுதல் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கேசவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள இந்த உயர் நிர்வாகப் பதவிக்கு, பணிமாறுதல் அடிப்படையில் தகுதியான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிகாரிகளின் தகுதிகளை ஆய்வு செய்த நிறுவனக் குழுவின் மனிதவளத் துணைக்குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரி கேசவனை துணை இயக்குநராகத் தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இந்த நியமனத்திற்கு ஜிப்மர் தலைவரும் தற்போது தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளார்.


அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும்
மேலும், இப்பதவிக்கான காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து ஜிப்மர் மூத்த நிர்வாக அலுவலர் ஹவா சிங் வெளியிட்ட அறிவிப்பில், “தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கான பணி நியமனக் கடிதம் மற்றும் அழைப்பு விவரங்கள் விரைவில் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
