Homeசெய்திகள்இந்தியாநீரஜ் குமார் சின்ஹாவிற்கு விழுந்த பலத்த அடி.. பாஜகவை அலறவிடும் பிரசாந்த் கிஷோர்! பிகாரில் என்ன...

நீரஜ் குமார் சின்ஹாவிற்கு விழுந்த பலத்த அடி.. பாஜகவை அலறவிடும் பிரசாந்த் கிஷோர்! பிகாரில் என்ன நடக்கிறது?

-

- Advertisement -

பாங்கீபூரில் ஜன் சுராஜ் கட்சி அபார முன்னிலை – குஜராத்தில் பாஜக, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கரம் ஓங்குகிறது.நீரஜ் குமார் சின்ஹாவிற்கு விழுந்த பலத்த அடி.. பாஜகவை அலறவிடும் பிரசாந்த் கிஷோர்! பிகாரில் என்ன நடக்கிறது?

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள முக்கியச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிகார் மாநிலத்தின் பாங்கீபூர், மத்தியப் பிரதேசத்தின் ததியா மற்றும் குஜராத்தின் மஞ்ஜல்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

we-r-hiring

பாங்கீபூரில் பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை
பிகார் அரசியல் களத்தில் பெரும் சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள பாங்கீபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், ‘ஜன் சுராஜ்’ கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து தனது வாக்கு வித்தியாசத்தை அதிகரித்து வருகிறார். நீண்டகாலமாக பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்டு வந்த இத்தொகுதியில், பிரபல அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் முதன்முறையாக நேரடித் தேர்தல் களமிறங்கினார்.

தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளின் அடிப்படையில், தனது நெருங்கிய போட்டியாளரான பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகித்து வருகிறார். இத்தொகுதியில் மொத்தம் 31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதர மாநிலங்களின் இடைத்தேர்தல் நிலவரம்

  • குஜராத் (மஞ்ஜல்பூர்): குஜராத் மாநிலம் மஞ்ஜல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சதீந்திரபாய் படேல் (சதீஷ் படேல்) தனது எதிரணி வேட்பாளர்களை விடத் தொடர் முன்னிலையில் இருந்து வருகிறார்.
  • மத்தியப் பிரதேசம் (ததியா): மத்தியப் பிரதேசத்தின் ததியா தொகுதியில் ஆளும் பாஜக கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலும், அந்தந்த மாநில அரசியல் களத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முடிவுகள் குறித்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பீகார் இடைத்தேர்தல்: ஆளும் பாஜக பின்னடைவு; 1,162 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

MUST READ