Homeசெய்திகள்கட்டுரை"கோடிக்கணக்கில் செலவழித்து புதிய அலுவலகமா? - மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அரசின் மீது ராஜா...

“கோடிக்கணக்கில் செலவழித்து புதிய அலுவலகமா? – மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அரசின் மீது ராஜா தமிழ்மாறன் கடும் விமர்சனம்!”

-

- Advertisement -

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி, காவிரி நீர் விவகாரம் மற்றும் துப்புரவு பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டு, லட்சக்கணக்கில் மற்றும் கோடிகளில் அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் அரசு குறியாக இருப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர் ராஜா தமிழ்மாறன் தனது பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.

ராஜா தமிழ்மாறன்

we-r-hiring

​”மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பரமா? – எழும் கேள்விகள்!”

​முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றுவதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார நெருக்கடி நிலவும் இந்தச் சூழலில் பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற தேவையில்லாத செலவுகளுக்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்ியை எழுப்பியுள்ளார்.

​”தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளும், தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளும்!”

​ஜிஎஸ்டி மற்றும் இதர துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதைப் பற்றி கவலைப்படாமல் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட எவ்விதப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகாண முற்படாமல், ஆளுங்கட்சி நிர்வாகத் திறமையின்றிச் செயல்பட்டு வருவதாக அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அஜித்தின் அடுத்த 3 பிரம்மாண்ட படங்கள் இவைதான்! — ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம விருந்து!

MUST READ