உணவுப் பொருட்களின் தரக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில், பிரபல நிறுவனமான டாபர், தனது உணவுப் பொருட்களின் மீது “100%” என்று குறிப்பிட்டு விற்பனை செய்வதற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலான கூற்றுகளைத் தடுக்கும் நோக்கில், FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுமையான தூய்மையை உறுதிப்படுத்தாமல் அல்லது அறிவியல் பூர்வமாக நிரூபிக்காமல் “100%” லேபிள்களைப் பயன்படுத்துவது உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் சுட்டிக்கட்டியுள்ளனர்.

இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் டாபர் நிறுவனம் தனது உணவுப் பொருட்களின் லேபிள்களில் இத்தகைய வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களின் பெயரால் பொதுமக்களைத் திசைதிருப்பும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
