Homeசெய்திகள்தமிழ்நாடுஉதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு: கூட்டணித் தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம்!

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு: கூட்டணித் தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம்!

-

- Advertisement -

தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சை கருத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பெண் குறித்து இழிவாகப் பேசிய இந்த அணுகுமுறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

உதயநிதி

we-r-hiring

தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள்:

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்:

“தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

“எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலிவான இழிமொழிகளைப் பேசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்குச் சிறிதும் உகந்தது அல்ல. ‘யாகாவராயினும் நா காக்க’ எனும் குறள் நெறியை அவர் நினைவில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.”

விசிக தலைவர் தொல். திருமாவளவன்:

“கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி உதயநிதி ஸ்டாலின் பேசியது, தேசிய மற்றும் ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்குப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. அதேநேரம், சட்டப்பேரவை கூடும் இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சி மீதான நன்மதிப்பை உயர்த்தும்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்:

“எதிர்க்கட்சித் தலைவர் பொதுவெளியில் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்பிரச்சினையை அவர் சட்டப்படி எதிர்கொள்ளட்டும். அதேநேரம் சட்டப்பேரவையில் அவரது பங்கேற்பு அவசியமானது என்பதால், அரசு அதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.”

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்:

“எதிர்க்கட்சித் தலைவர் கண்ணியக் குறைவாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அவர் வகித்து வரும் உயரிய பொறுப்புக்கு உகந்ததல்ல. அதேநேரம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருந்து கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.”

வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை:

“வைகை ஆற்றைச் சுத்தம் செய்தபோது, ‘இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?’ என்று தோன்றியது. பிறகுதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன்.”

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்:

“தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் உதிர்த்திருக்கும் தரமற்ற சொல், மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரையும் புகழையும் கெடுக்கும் வகையில் வெளிவந்திருப்பது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது.”

பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு:

“உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாகரிகமற்றது மற்றும் மிகவும் மலிவானது. இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ஒருநாள் மாநிலத்தை ஆட்சி செய்தால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். பொது மேடையில் நடிகை த்ரிஷாவைக் காயப்படுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.”

தமிழக பட்ஜெட்: 1,000 புதிய ஏசி பஸ்களுக்கு ரூ.500 கோடி நிதி!

MUST READ