விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு’ இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொண்டர்களுக்குச் சிறப்பு அறிவுறுத்தல்களையும் சில கசப்பான உண்மைகளையும் முன்வைத்துள்ளார்.


மாநாட்டு ஏற்பாடுகளில் நிலவும் தொய்வுகள் குறித்தும், மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பாகவும் அவர் வெளியிட்டுள்ள இந்த நேரலைத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநாட்டு நிதி மற்றும் விளம்பரப் பணிகள்: மாவட்டச் செயலாளர்களுக்குக் கண்டனம்.
தேர்தலுக்குப் பிறகு விசிக நடத்தும் முதல் மாநாடு என்பதால் இது மிகுந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன் மாநாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பல மாவட்டச் செயலாளர்கள் மந்தமாகச் செயல்படுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்தபட்சம் ₹1 லட்சம் வரை மாநாட்டு நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த போதிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்கள் இன்னும் அந்த நிதியை முழுமையாக வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்
திறந்தவெளி மாநாடு என்பதால் பந்தல் அமைப்பு, தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளி அமைப்பு (Sound System), குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற பிரம்மாண்ட செலவினங்களைச் சமா்ப்பிக்கத் தோழர்களின் நிதிப் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை அவர் விளக்கினார்
மேலும், அனைத்துப் பகுதிகளிலும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மற்றும் சுவர விளம்பரங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும், இதில் ஆர்வம் காட்டாதவர்கள் மாநாட்டிற்குப் பின்னர் உரிய விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பான பயணம்:
வேன்களுக்குத் தடை, பேருந்துகளுக்கு முன்னுரிமை!
மாநாட்டிற்குத் திரண்டு வரும் தொண்டர்களின் பாதுகாப்பே தமக்கு முதன்மையானது என்று வலியுறுத்திய திருமாவளவன் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் திறந்தவெளி லாரிகள் அல்லது வேன்களில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்குப் பதிலாக, கடந்த காலங்களைப் போலவே பாதுகாப்பான முறையில் அரசு அல்லது தனியார் பேருந்துகளில் உரிய கட்டணம் செலுத்தி மாநாட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஊக்கப்படுத்தினார் வசதி படைத்த முன்னணித் தோழர்கள் முன்கூட்டியே வண்டிகளைப் பதிவு செய்து, மக்களைத் திரட்ட உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
கட்சி மறுசீரமைப்புப் பணிகளும் தலைமையின் அதிகாரமும்!
கட்சியில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்துப் பேசிய அவர், மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றார். பல இடங்களில் நீண்டகாலமாக உழைத்தவர்கள் விடுபட்டிருப்பதால், தலைமை தலையிட்டுத் திருத்தங்களைச் செய்ய வேண்டி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மறுசீரமைப்பு முழுமையடையும் வரை கட்சித் தலைமைக்கு உரிய மாற்றங்களைச் செய்யும் தன்னாட்சி உரிமை உண்டு என்பதைத் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார், மேலும், நள்ளிரவு நேரங்களில் தன் தங்குமிடத்திற்கு வந்து அழுத்தம் தருவதைத் தவிர்த்து, கட்சி அலுவலகம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொண்டார்
“திரும்பும் திசையெல்லாம் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு குறித்த விளம்பரங்கள் தெரிய வேண்டும்; விசிகதான் உண்மையான தமிழ் தேசிய இயக்கம் என்பதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும்” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ள திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் இம்மாநாட்டைச் சரித்திரச் சாதனையாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
தவெக அரசின் பட்ஜெட் முழுத் திருப்தி அளிக்கவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசப் பேட்டி!
