Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவைத் திணறடிக்கும் ஈரான் மோதல்: போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைவால் பென்டகன் அதிர்ச்சி!

அமெரிக்காவைத் திணறடிக்கும் ஈரான் மோதல்: போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைவால் பென்டகன் அதிர்ச்சி!

-

- Advertisement -

​ஈரானுடனான தொடர் மோதல்களால் அமெரிக்க ராணுவத்திற்குப் போர் முனையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன போர்க்கப்பல்களின் பற்றாக்குறை, ஏவுகணை இடைமறிப்பான்களின் கையிருப்பு குறைவு மற்றும் வலைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை போன்ற காரணங்களால் டிரம்ப் நிர்வாகம் பெரும் இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவைத் திணறடிக்கும் ஈரான் மோதல்: போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைவால் பென்டகன் அதிர்ச்சி!

we-r-hiring

முக்கியப் பின்னணியும் ராணுவ நிலவரமும்:
​போர்க்கப்பல்கள் பற்றாக்குறை: ஈரானிய ஏவுகனைகளில் இருந்து இஸ்ரேலையும், அதே நேரத்தில் அமெரிக்கப் படைகளையும் பாதுகாக்கப் போதுமான ‘டிஸ்ட்ராயர்’ (Destroyer) போர்க்கப்பல்கள் இல்லை என்று அமெரிக்க ஐரோப்பிய கட்டளையின் தலைவர் ஜெனரல் அலக்சிஸ் கிரீன் கோவெக்ஸ் பெண்டகன் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் போதிய கப்பல்கள் கிடைக்கவில்லை எனில் இஸ்ரேலின் பாதுகாப்பைக் காட்டிலும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆயுதக் கையிருப்பு குறைவு: ஈரானிய ஏவுகனைகளை இடைமறிக்கப் பயன்படும் ‘தாட்’ (THAAD) வகை இடைமறிப்பு ஏவுகனைகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருவது அமெரிக்காவிற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது அவற்றை மீண்டும் உற்பத்தி செய்து நிரப்பும் வேகம், போரில் பயன்படுத்தப்படும் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

செங்கடல் மற்றும் ஹவுதி தாக்குதல்கள்:
ஈரானுக்கு அருகில் போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், மறுபுறம் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகனைகளைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிற்குச் சவாலாக மாறியுள்ளது

​வலைகுடா நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை:
​இதற்கிடையே, அமெரிக்கா தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் வலைகுடா நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஆயுதப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய நாடுகளின் பதற்றமான சூழல் காரணமாக மத்திய கிழக்கு போர் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

போர்க்கப்பல் பற்றாக்குறை, ஆயுதக் குறைபாடு மற்றும் ஈரானின் தொடர் அழுத்தங்களால் அமெரிக்க ராணுவம் தற்போது பெரும் தற்காப்பு மற்றும் மூலோபாயச் சிக்கல்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு வந்த சோதனை.. காலியான ஆயுதக் கிடங்குகள்! ஈரானை எதிர்க்க பழைய ஏவுகணைகளை தூசு தட்டும் பென்டகன்!

MUST READ