- Advertisement -
சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரியும் காட்டு யானை
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை விலை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சுமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை. கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் குறிப்பாக காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

கடம்பூர் மலைப்பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக ஒற்றை காட்டி யானை சுற்றி திரிகிறது. இந்நிலையில் போதிக்காடு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த அந்த காட்டி யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, பூசணி காய்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது.
தகவல் கிடைத்து வனத்துறையினர் வந்தபின் பகுதி மக்கள் காட்டு யானையை அடர் வனத்துக்குள் விரட்டியடித்தனர்.