தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசிய முக்கிய அம்சங்களின் தொகுப்பு.
“லூசுப் பையன் என்று விட்டோம்… ஆனால் முதலாகிவிட்டான்!”
தேர்தல் களத்தின் ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த ஆர்.பி. உதயகுமார், “தேர்தலுக்கு முன்பு இந்த பையன் விஜய், ‘திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி’ என்று சொன்னான். அப்போதோ இவன் எதையோ உளறுகிறான் என்று நினைத்து நாம் விட்டுவிட்டோம். ஆனால், இன்று அவன் நினைத்தபடியே முதல்வராகவே நாற்காலியில் அமர்ந்துவிட்டான். நாட்டிற்காகவோ, மக்களுக்காகவோ எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாமல் வந்தவர் எப்படி இந்த உயரத்தை அடைந்தார்?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார்.

“படத்துக்குத் தியேட்டரில் அழாதீர்கள்!” – கிண்டல் பேச்சு
நடிகர் விஜயின் கடைசிப் படம் குறித்துப் பேசிய அவர், “விஜயின் கடைசிப் படம் என்பதால் அவரது கட்சியினரும் ரசிகர்களும் தியேட்டரில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் சொன்னேன்: சிரித்தால் கல்யாண வீடு, அழுதால் அது ஏழவு வீடு. தியேட்டரில் போய் அழுதால் விஜய் செத்துப்போயிட்டான் என்று மக்கள் நினைப்பார்கள்; அதனால் தயவுசெய்து அங்கு அழாதீர்கள். வேண்டுமானால் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அவர் அங்கே எப்படி நடிக்கிறார் என்று போய் பாருங்கள்!” என்று கேலியாகப் பேசினார்.

வறட்சியும் விவசாயமும் தெரியுமா?
“உலகத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு மட்டும்தான். ஆனால், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ‘குறுவை சாகுபடி’ என்றால் என்னவென்றே தெரியுமா? டெல்டா மாவட்டங்களின் வறட்சி நிலவரம் அவருக்குப் புரியுமா?” என்று சாடிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது மீனவர்களுக்கு 20,000 ரூபாய் நிவாரணம் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அமைச்சர்கள் மாறி மாறிப் பேசி அதிகாரிகளைத் தலைசுற்ற வைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
உண்மையான மக்கள் தீர்ப்பு!
“35 சதவீத மக்கள் மட்டுமே விஜய் அணிக்கு வாக்களித்துள்ளனர்; அதாவது 65 சதவீத மக்கள் அவரை வேண்டாம் என்று புறக்கணித்துள்ளனர். அதேபோல, 68 சதவீத மக்கள் திமுக வேண்டாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்” என்று புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட அவர், அதிமுகவில் கட்சிதான் எப்போதுமே பெரியது என்றும், தனிமனித வழிபாட்டிற்கு அங்கு இடமில்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்வதற்கு விஜய் என்ன தியாகம் செய்தார்?” என்று கேள்வி எழுப்பிய ஆர்.பி. உதயகுமார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி 98,000 வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுத் தன் பலத்தை நிரூபித்ததே உண்மையான மக்கள் ஆதரவு என்றார்.
1 நாளுக்கு முன்னே சொல்லணும்! – நடிகர்கள், விஐபிக்கள் தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் போட்ட புது ரூல்ஸ்!
